1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 2 ஜூலை 2021 (16:14 IST)

ஆறுமுகச்சாமி ஆணையம் குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்வதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த ஆணையம் அமைக்கப்பட்டு 4 வருடங்கள் ஆன பின்னரும் இன்னும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யாமல் உள்ளது. மேலும் தற்போது விசாரணை நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இந்த நிலையில் செயல்படாத ஆணையத்தால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது என்று பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் மூன்று மாதங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும்படி ஏன் உத்தரவிடக் கூடாது என்று கூறியுள்ளது
 
இதுகுறித்து தமிழக அரசு 6 வாரங்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு தமிழக அரசு என்ன பதிலளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.