ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 23 அக்டோபர் 2019 (11:15 IST)

பஸ்டே கொண்டாடிய மாணவர்களுக்கு நூதன தண்டனை – நீதிமன்றம் அதிரடி !

சென்னையில் பச்சையப்பன் கல்லூரியில் பஸ்டே கொண்டாட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு கொடுக்கும் வகையில் செயல்பட்ட மாணவர் ஒருவருக்கு நீதிமன்றம் நூதனமான தண்டனை வழங்கியுள்ளது.

சென்னை கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அரசுப் பேருந்துகளில் பஸ்டே கொண்டாட்டம் பெயரில் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு அளிக்கும் விதமாக நடந்து கொள்கின்றனர். இந்நிலையில் இது சம்மந்தமான வழக்கு ஒன்றில் பச்சையப்பன் கல்லூரி மாணவர் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் துரைராஜ் என்ற மாணவர் தான் பச்சையப்பன் கல்லுரி மாணவர் இல்லை என்றும் புதுப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர் என்றும் அதற்கான ஆதாரங்களையும் காட்டினார். இந்நிலையில் மாணவர் சம்மந்தப்பட்ட இடத்தில் இருந்ததால் அவர் சட்டக்கல்லூரி வளாகத்தில் பத்து மரக்கன்றுகளை நட்டு ஒரு மாதத்துக்கு அதைப் பராமரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

 இது சம்மந்தமாக கல்லூரி முதல்வரிடம்  தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.