திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 25 மே 2021 (12:55 IST)

அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் இல்லாதவர்கள் தனியார் மருத்துவமனையில் எவ்வாறு சிகிச்சை பெறுவார்கள்… நீதிமன்றம் கேள்வி!

அரசின் காப்பீட்டுத் திட்டங்களில் இல்லாதவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பது குறித்து அரசிடம் என்ன திட்டம் உள்ளது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

திமுக தலைமையிலான அரசு பதவியேற்ற பின் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கும் காப்பீட்டு திட்டத்தின் படி அரசே சிகிச்சைக்கான செலவை ஏற்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் நாதன் என்பவர் தொடர்ந்த வழக்கில் கொரோனா தாக்கம் குறையும் வரை தனியார் மருத்துவமனைகளை அரசே கையிலெடுத்து இலவச சிகிச்சை வழங்கவேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணையில் நீதிபதி ‘அரசின் காப்பீட்டு திட்டத்தில் இடம்பெறாதவர்கள் எப்படி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள் என்பது குறித்து விளக்கம் அளிக்கவேண்டும் எனக் கூறி வழக்கை மே 31 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.