புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 22 அக்டோபர் 2021 (23:27 IST)

’’வாடஸ் ஆப்’’ வழியே கொரோனா தடுப்பூசி சான்றிதழ்

கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்குப் பரவிய கொரோனா தொற்றின்  முதல் அலை முடிந்து தற்போது 2 வது வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரொனாவைத் தடுக்க 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதற்கு ஐநா பாராட்டுகள் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசிக்கான சான்றிதழை வாட்ஸ் ஆப் வழியே பெறலாம் என அரசு அறிவித்துள்ளது. 90131 51515 என்ற வாட்ஸ் ஆப் நம்பரில் செய்து அனுப்பி ஒரு நிமிடத்தில் சான்றிதழ் பெறலாம் எனக் கூறியுள்ளனர்.