புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (10:19 IST)

கொரோனா வார்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த நோயாளி! – சென்னையில் அதிர்ச்சி

சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா நோயாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. முக்கியமாக சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ள சென்னை மாநகராட்சி கொரோனா பரிசோதனைகளையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கேளம்பாக்கத்தை சேர்ந்த ரங்கன் என்பவருக்கு சில நாட்கள் முன்னதாக கொரோனா உறுதியான நிலையில் அங்குள்ள அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவில் யாரும் கவனிக்காத நேரத்தில் கொரோனா வார்டில் உள்ள ஜன்னல் ஒன்றில் ரங்கன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.