புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 3 மே 2020 (14:20 IST)

பிரதமரின் நடவடிக்கையால் கொரொனா பாதிப்பு பரவவில்லை - ஹெச்.ராஜா

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 39,980 பேர் பதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 10,633 பேர் குணமடைந்துள்ளனர். 1,301 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரொனாவுக்கு எதிராக தமது உயிரைப் பொருட்படுத்தாமல் போராடி வருகின்ற மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய ராணுவம் சார்பில் போர்விமானம் மூலம் நாட்டில் உள்ள மருத்துவமனைகளின் மீது மலர் மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் மோடியில் துரிதமான நடவடிக்கையால்தான் இந்தியாவில் கொரொனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என பாஜக தேசிய செயலர் ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

சீனாவில் இருந்து பரவிய நோய்த்தொற்றால் அமெரிக்காவில்  பாதிப்பு 10 ;லட்சம் தாண்டியது,  அமெரிக்காவை விட 3 மடங்கு மக்கள் தொகை கொண்டிருக்கும் இந்தியாவில் பிரதமரின் கடும் முயற்சியால் நோய் பரவவில்லை என தெரிவித்துள்ளார்.