திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 28 அக்டோபர் 2020 (12:09 IST)

நெல்லையில் இன்று ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு

நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா தொற்று

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் இன்று மட்டும் ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 14,153 ஆக உயர்ந்தது. 13,636 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 290 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை 208 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.