1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By c.anandakumar
Last Updated : வியாழன், 21 பிப்ரவரி 2019 (21:16 IST)

கரூரில் அரசியல் சட்டம் எரிப்பு நுால் அறிமுக விழா ...

தமிழக அரசு கொண்டு வந்துள்ள 5 ம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொது தேர்வு அறிவித்துள்ளது. இந்த கொலை கல்வி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கரூரில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன் செய்தியாளர்களுக்கு பேட்டி.
பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் கரூரில் தனியார் மண்டபத்தில் அரசியல் சட்டம் எரிப்பு நுால் அறிமுக விழா நடைபெற்றது. இதில் மே.17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பெரியார் திராவிட கழகத்தின் பொது செலயாளர் இராமகிருட்டிணன் கலந்து கொண்டு நுழை வெளியிட்டனர். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக அரசு தற்போது 5 ம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொது தேர்வு முறையை அறிவித்துள்ளனர். இதனால் அனைவருக்கும் கல்வி என்ற முறைசெயலற்று போகும் என்றும், அரசியல் சட்டம் 25 ம் படி ஜாதி காக்கப்படுகிறது என்ற வரிகளை அகற்ற வேண்டும் என்று 1957 ம் ஆண்டு சட்ட எரிப்பு பேராட்டத்தை பெரியார் நடத்தினார்.
 
தற்போது வரை அந்த சட்டம் நிறுத்தப்படவில்லை, அதேபோல் ஆணவ கொலைகளுக்கும் இந்த ஜாதிதான் காரணமாக இருக்கிறது. தற்போது தமிழக அரசு கல்வித்துறை சார்பில் கொண்டு வந்துள்ள 5 மற்றும்8 ம் வகுப்பு மாணவர்களுக்கு கொண்டுவந்துள்ள சட்டத்தில் அனைவருக்கும் கல்வி இறுதி வரை கல்வி என்ற கோட்பாடு நிறைவு பெறாமல் போகிவிடும். தற்போது கொண்டு வந்துள்ள இந்த சட்டதால் 5 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இடையிலேயே நிற்கும் நிலை ஏற்படும் என்றார்.