வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: வியாழன், 5 டிசம்பர் 2019 (14:35 IST)

நிகழ்ச்சியில் நடனம் ஆடிய காங்கிரஸ் பெண் அமைச்சர் : வைரலாகும் வீடியோ

மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பெண் அமைச்சர் நடனமாடும்  வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இமார்தி தேவி இருந்து வருகிறார்.
 
இவர், அம்மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன் , அங்கு ஒலிபரப்பான இசைப்பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடினார். அப்போது, அங்கிருந்தவர்கள் அவர் மீது பணத்தை வீசினர்.
 
தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.