புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

லாட்டரி சீட்டுக்களை கொண்டு வந்தால் எதிர்ப்போம்: கே.எஸ்.அழகிரி

வருமானம் தேவை என்பதற்காக டாஸ்மாக் மற்றும் லாட்டரி சீட்டுகளை கொண்டுவருவதை காங்கிரஸ் எதிர்க்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கள் தடை செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகி வரும் நிலையில் மீண்டும் லாட்டரி சீட்டு தொடங்க தமிழக அரசு ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இது குறித்து தனது கண்டனத்தை தெரிவித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தமிழக அரசின் வருமானத்தைப் பெருக்குவதற்கான லாட்டரி சீட்டுகளை கொண்டுவந்தால் அதை காங்கிரஸ் கட்சி எதிர்க்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
திமுக வின் முக்கிய கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சியை லாட்டரி சீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது