தலைவிரி கோலமாக குண்டு கட்டாக தூக்கி செல்லப்பட்ட ஜோதிமணி: கரூரில் பரபர!

Sugapriya Prakash| Last Modified சனி, 20 பிப்ரவரி 2021 (13:02 IST)
கரூரில் காந்தி சிலை அகற்றப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்திய எம்.பி. ஜோதிமணி கைது செய்யப்பட்டுள்ளார். 

 
கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த காந்தி சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் எம்.பி. ஜோதிமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். 
 
ஆனால் இதற்கு ஜோதிமணி மறுப்பு தெரிவிக்க, ஜோதிமணியை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸாரை கைது செய்தனர். இச்சம்பவம் கரூர் லைட் ஹவுஸ் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதில் மேலும் படிக்கவும் :