வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 11 மார்ச் 2021 (19:19 IST)

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதி பட்டியல் அறிவிப்பு!

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த 25 தொகுதிகளை இறுதி செய்வதற்காக காங்கிரஸ் தலைவர்கள் கடந்த சில நாட்களாக திமுக தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்
 
இந்தப் பேச்சுவார்த்தையில் தற்போது உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன அவை பின்வருமாறு
 
பொன்னேரி, திருபெரும்புதூர், ஊத்தங்கரை, ஓமலூர், உதகமண்டலம், கோவை தெற்கு, காரைக்குடி, மேலூர், சிவகாசி, திருவைகுண்டம், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், ஈரோடு கிழக்கு, தென்காசி, அறந்தாங்கி, விருத்தாச்சலம், நாங்குநேரி, கள்ளக்குறிச்சி, திருவில்லிப்புத்தூர், திருவாடானை, உடுமலைப்பேட்டை, மயிலாடுதுறை, வேளச்சேரி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது