திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: புதன், 8 ஜனவரி 2020 (21:59 IST)

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கட்சி தலைமையில் குவிந்த பாராட்டுகள்!!!

கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கட்சி தலைமையில் குவிந்த பாராட்டுகள் – வரும் 2021 ம் ஆண்டு பொதுத்தேர்தலில் 4 தொகுதியிலும் அ.தி.மு.க தான் ஜெயிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழக அளவில் தற்போது 27 மாவட்டங்களில் இரண்டு தேதிகளில், இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் மட்டுமில்லாது, ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் என்று 4 பதவிகளுக்கும் தேர்தல் மிகுந்த அளவில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இதில் 2 பதவிகள் அதாவது ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவியும், மாவட்ட கவுன்சிலர் பதவியும் கட்சி சார்புடையது. ஆகவே தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு உள்ளாட்சி தேர்தலில் வேலை பார்த்தது. 
 
ஆனால்., தமிழக அளவில் அதிக இடங்களை தி.மு.க பிடித்த நிலையில் அ.தி.மு.க கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஒ.பி.எஸ் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியும் கொந்தளித்து, தோற்றதற்கு காரணத்தினை தேட கூறியது.
 
ஒரு புறம் இருக்க, சப்தமே இல்லாமல், கரூர் மாவட்டத்தினை அ.தி.மு.க வின் கோட்டையாக மீண்டு மாற்றியவர், தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க கழக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆக்கியுள்ளார். இதில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பதவியில் 115 இடங்களில் அ.தி.மு.க கட்சியானது 66 இடங்களும், பா.ஜ.க கட்சி 3 இடங்கள் என்று மொத்தம் சேர்த்து அ.தி.மு.க கூட்டணியானது 69 இடங்களை கைப்பற்றியது. சுயேட்சை 9 இடங்களையும் கைப்பற்றியது. .
 
இதில் தி.மு.க கட்சி 33 இடங்களும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 3, கம்யூனீஸ்ட் மார்க்சிஸ்ட் ஒரு இடமும் ஆக மொத்தம் சேர்த்து தி.மு.க கூட்டணியானது மொத்தம் 37 இடங்களை மட்டுமே வென்றது. 
 
மேலும், மீதமுள்ள சுயேட்சைகள் 9 பேரும் அதிமுக வில் இணைய உள்ளனர். ஆக மொத்தம் 115 இடங்களுக்கு அ.தி.மு.க மட்டுமே 78 இடங்களும், அதே கரூர் மாவட்ட கவுன்சிலர் பதவியில் 12 நபர்களில் 9 நபர்கள் அ.தி.மு.க கட்சியினர், 3 நபர்கள் மட்டுமே தி.மு.க வினர்.
 
இந்நிலையில், ஒரே கட்சியில் இருந்து இன்றும் ஒரே கட்சியில் அதுவும் சாதாரண ஒன்றிய செயலாளர் என்று பதவியில் இருந்து ஆட்சியில் ஒன்றிய கவுன்சிலரான நிலையில், அ.தி.மு.க கட்சியை மட்டுமே இன்றுவரை நம்பிய எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு மாவட்ட செயலாளர் பதவியோடு, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் என்ற பதவிகள் எல்லாம் கொடுத்து அழகு பார்த்த அ.தி.மு.க கட்சிக்கு மேலும், ஒரு மகுடம் சூடியதாகவும், வலுசேர்ப்பது  போல, தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாகையினை சூடிக் கொடுத்துள்ளார்.

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், இவருக்கு சென்னையில் அ.தி.மு.க கட்சியின் தலைமை நிலையத்திலிருந்து ஏராளமான பாராட்டுகள் குவிந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஒ.பி.எஸ் ஆகியோரும் வாழ்த்தியுள்ளனர். மேலும், அவர்களிடம் வர உள்ள 2021 -ம் ஆண்டு பொதுத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க கட்சியினை வெற்றி பெறச்செய்வேன் என்று உறுதி கூறியதாக தெரியவந்துள்ளது
தற்போது கரூர் மாவட்டம், அ.தி.மு.க கோட்டையாகவும், அதாவது இலைகள் நன்கு வளர்ந்த நிலையில், தி.மு.க பலம் சரிந்து, சூரியன் மறைந்த நிலையில் காணப்படுவதாக பிறகட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.