செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 16 டிசம்பர் 2016 (16:45 IST)

ஜெ. விஷயத்தில் திருநாவுக்கரசுக்கு ’ட்விட்டர்வாசி’ நறுக் கேள்வி

வெள்ளை அறிக்கை விட்டால் மட்டும் ஜெயலலிதா உயிருடன் வந்துவிடுவாரா என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கூறியது குறித்து ட்விட்டர் வாசி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி ஆகியோருக்கு தூக்குத் தண்டனையும், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு இருந்தது.

இதில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனு மீது குடியரசுத் தலைவர் முடிவெடுப்பதில் 11 ஆண்டுகாலம் தாமதம் ஏற்பட்டதையடுத்து சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோரின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

மேலும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வது குறித்து சம்பந்தப்பட்ட அரசு முடிவெடுக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் கூறியது. இதையடுத்து 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.

ஆனால் மத்திய அரசு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்குத் தொடர்ந்து அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரிக்கப்பட்டு வருகிறது.


 

இந்நிலையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து வெள்ளை அறிக்கை விட வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்கு பதலளித்திருந்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் சு.திருநாவுக்கரசர், வெள்ளை அறிக்கை விட்டால் மட்டும் ஜெயலலிதா உயிருடன் வந்துவிடுவாரா என்றும் அவருக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் டாக்டர்கள், லண்டன் டாக்டர் என அனைவருமா பொய் சொல்கிறார்கள்? என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில், இணையவாசி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சு.திருநாவுக்கரசரின் கேள்வி பதிலளிக்கும் வகையில் பதிவு ஒன்றினை போட்டுள்ளார்.

அதில், ”ராஜிவ் காந்தி வந்துருவார்னா மூணு பேர உள்ள வெச்சிருக்கீங்க?!” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் பதலளிப்பது முறையற்றது என்கிற முறையிலும் அதற்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.