செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 24 மே 2021 (16:28 IST)

சிவகார்த்திகேயன் தந்தை மரணம் குறித்து சர்ச்சைக் கருத்து… ஹெச் ராஜா மீது புகார்!

சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்தித்த போது நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை கொலை செய்யப்பட்டதாக கூறி சர்ச்சையைக் கிளப்பினார்.

நேர்காணல், பேட்டி என எல்லாவற்றிலும் சர்ச்சையான கருத்துக்களை கூறி சலசலப்பை ஏற்படுவது  எச் ராஜாவிற்கு ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய எச். ராஜா, ஜெயபிரகாஷ் என்ற ஜெயிலரை தற்போதைய பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா கொலை செய்துவிட்டார்.  ஜெயபிரகாஷ் என்பவர்  நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை தான் என கூறி அதிசர்ச்சி அளிக்கும் வகையில் பேசினார். இந்த விவகாரம் சமூகவலைதளத்தங்களில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக பகிரப்பட்டு பேசப்பட்டு வந்த நிலையில் இதுகுறித்த தெளிவு ஒன்று கிடைத்துள்ளது. 

அதாவது சிவகார்த்திகேயனின் தந்தை பெயர் ஜெயபிரகாஷ் இல்லை ஜி.தாஸ். அதே போல் அவர் கொலை செய்யப்பட்டு மரணிக்கவில்லை. உடல்நலக்குறைவால் மரணமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் ஹெச் ராஜாவை கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதையடுத்து இப்போது மனித நேயமக்கள் கட்சி வழக்கறிஞர் பிரிவு சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.