வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (18:47 IST)

பிபிஇ கிட் அணிந்து வந்து கனிமொழி எம்பி ஓட்டு !

ஜனநாயக கடமை ஆற்றுவதற்காக கொரோனா பாதுகாப்பு உடையான பிபிஇ கிட் அணிந்து வந்து கனிமொழி எம்பி வாக்களித்தார். இப்புகைப்படம் வைரலாகிவருகிறது.

ஆனால் இதுகுறித்து விஜய் தரப்பு அளித்துள்ள விளக்கத்தில் ‘ வாக்குச்சாவடி அமைந்த இடம் விஜய்யின் வீட்டுக்குப் பின்னரே இருந்தது. அந்த தெரு குறுகலான தெரு என்பதால் காரில் சென்று வரமுடியாது என்பதால்தான் சைக்கிளில் சென்றார்.’ என்று கூறப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசியல்வாதிகள்,அரசியல்தலைவர்கள்,சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்கள் என எல்லோரும் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் தூத்துக்குடி தொகுதி எம்பியும், திமுக நிர்வாகியுமான கனிமொழி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். பாஜக வேட்பாளர் குஷ்பு கனிமொழி குணமடைய வேண்டுமென டுவீட் பதிவிட்டார்.

இந்நிலையில், இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமை ஆற்றுவதற்காக கொரோனா பாதுகாப்பு உடையான பிபிசி கிட் அணிந்து வந்து கனிமொழி எம்பி வாக்களித்தார். இப்புகைப்படம் வைரலாகிவருகிறது.