செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 28 செப்டம்பர் 2023 (14:12 IST)

லஞ்சம் பெற்ற புகாரில் கல்லூரி முதல்வர்,பேராசிரியர் சஸ்பெண்ட்

bribe
உதகையில் அரசுக் கல்லூரி முதல்வர் அருள் அந்தோணி, தாவரவியல் துறை பேராசியர் ரவி ஆகியோர் லஞ்சம் பெற்ற புகாரில் சஸ்பெண்ட்  செய்யப்பட்டுள்ளனர்.

உதகையில் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு, ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்குவதற்காக பரிந்துரை கடிதம் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக முதல்வர் அந்தோணியும், மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவுக்கு மாறுவதற்காக மாணவர்களிடன் லஞ்சம் பெற்ற புகாரில் தாவரவியல் பேராசிரியர் ரவி மீது புகார் எழுந்தது.

இப்புகாரின் அடிப்படையில்,  முதல்வர் மற்றும் பேராசிரியர் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களிடம் இருந்து கூகுள் பே மூலமாகவும், ரொக்கமாகவும் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.