செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Updated : வெள்ளி, 19 ஜூலை 2024 (15:59 IST)

இரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி-தூய்மை பணியாளர்கள் 500க்கு மேற்ப்பட்டோர் காத்திருப்பு போராட்டம்!

மதுரை அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள  திருவள்ளுவர் சிலை முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிளார்கள் சங்கம் சார்பில் தூப்மை பணியாளர்கள். தூய்மை காவலர்கள். மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள்.
 
கிராம ககாதார பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு அரசு அறிவித்த சம்பளத்தை  வழங்ககோரியும்  500 க்கு மேற்ப்பட்ட தொழிலாளர்கள் காத்திருப்பு அமைதி போராட்டம் நடத்தினர்.
 
போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் வெங்கிடசாமி தலைமையில் சிறப்பு அழைப்பாளர் கிருஷ்ணசாமி. நாகராஜன்.சேதுபாலமுருகன் காளிதாஸ்.ராதாகிருஷ்ணன். உள்பட பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
 
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கிருஷ்ணசாமி கூறியது....
 
தமிழக அரசு நீதிமன்றம் தீர்ப்புகளை மதிக்கிறோம் என்று கூறுகின்றனர் ஆனால் உச்ச நீதிமன்றத்தில் தற்காலிகமாக பணிபுரியக்கூடிய ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என உச்சநீதிர்ப்பு வழங்கி உள்ளது அதனை தமிழக அரசு மதிக்கவில்லை.
 
குறைந்தபட்ச கூலி சட்டப்படி தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலத்துறை வழங்கி இருக்கக்கூடிய அரசு ஆணையை அமல்படுத்த வேண்டும் இல்லை என்றால்  2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் அனைவரையும் ஒன்று திரட்டி எங்களது கோரிக்கை உத்தரவு வரும் வரை காத்திருப்பு போராட்டம் நடைபெறும் எனக் கூறினார்.