செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: கோயம்புத்தூர் , புதன், 15 மே 2024 (14:37 IST)

பகவத் கீதா தியான ஸ்லோகங்களை கூறி ஆசிய உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த-ஏழு வயது சிறுவன்!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்த மணிகண்டன்,நீலம் தம்பதியரின் மகன் திரிசூல வேந்தன்.
 
நான்காம் வகுப்பு படித்து வரும் இவர் சிறு வயது முதலே பஞ்சாங்கம் படிப்பது,சிவ புராணம் பாடுவது,அனுமன் சாலிஷா  என ஆன்மீக வாசகங்களை கூறுவதில் ஆற்றல் பெற்றுள்ளார்.இந்நிலையில் இவரது வீட்டின் அருகே உள்ள ராதா என்பவர் பகவத் கீதா படிப்பதை ஆர்வமுடன் கவனித்துள்ள இவரின் திறமையை கண்ட ராதா பகவத் கீதாவின் சமஸ்கிருத தியான ஸ்லோகங்களை கூறி பயிற்சி  அளித்துள்ளார்.இந்த நிலையில் சிறுவன் ஒன்பது அத்தியாங்கள் கொண்ட கீதா தியானா ஸ்லோகங்களை அச்சு பிசகாமல் தெளிவாக கூற துவங்கியுள்ளார்.சிறுவன் திரிசூல வேந்தனுக்கு முறையாக அளித்த பயிற்சியால், சமஸ்கிருத மொழியில் கீதா தியானா ஸ்லோகங்களை 2 நிமிடம் 41 விநாடிகளில் கூறி அசத்தியுள்ளார்.இவரது இந்த சாதனை  ஆசிய உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது..இது குறித்து சிறுவன் கூறுகையில்,ஏற்கனவே பஞ்சாங்கத்தை தாம் வேகமாக படித்துள்ளதாகவும்,அதன் தொடர்ச்சியாக கீதா தியானா ஸ்லோகங்களை கூறுவதில் பயிற்சி பெற்றதால் இந்த சாதனையை செய்ய முடிந்த்தாக கூறினார்.. 
 
ஒன்பது அத்தியாங்கள் கொண்ட சமஸ்கிருத கிதா தியானா ஸ்லோகங்களை கோவையை சேர்ந்த  ஏழு வயது சிறுவன் கூறுவதை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்...