1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 28 ஏப்ரல் 2018 (08:15 IST)

இளம் பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்த நடிகர் - சென்னையில் அதிர்ச்சி

விடுதியில் தங்கியுள்ள பெண்களை ரகசியமாக படம் எடுத்த துணை நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள பூ மகள் நகரில் வசித்து வருபவர் வைரமூர்த்தி. இவர் ஒரு துணை நடிகர். சென்னை 28 மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.
 
இவரது வீட்டிற்கு அருகே ஒரு பெண்கள் தங்கும் விடுதி உள்ளது. அந்த விடுதியிலிருந்து பெண்கள் வெளியே வரும் போதும், மாடியில் பெண்கள் நடமாடும் போதும் வைரமூர்த்தி செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். அதை சில பெண்கள் பார்த்து விட்டு, விடுதி காப்பாளரிடம் கூறினர். அவர் போலீசாரிடம் புகார் அளித்தார்.
 
அதன் பேரில் வைரமூர்த்தியை போலீசார் கண்காணித்தனர். அப்போது, பெண்களை வீடியோ எடுத்த அவரை கையும், களவுமாக போலீசார் பிடித்தனர். அவரது செல்போனையும் பறிமுதல் செய்தர். 
 
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை புழல் சிறையில் அடைத்தனர்.