வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 4 செப்டம்பர் 2024 (09:35 IST)

தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்: மாரியப்பனுக்கு முதல்வர் வாழ்த்து..!

பாரா ஒலிம்பிக் போட்டிகளில் மூன்றாவது முறையாக தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு  தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 84 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதுவரை இந்தியா பாரா ஒலிம்பிக் போட்டியில் மூன்று தங்கம் , ஏழு வெள்ளி மற்றும் 10 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. இந்த நிலையில் பாரா ஒலிம்பிக் போட்டியில் மூன்றாவது முறையாக மாரியப்பன் தங்கவேலுக்கு பதக்கம் கிடைத்துள்ளதை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது

மூன்றாவது முறையாக பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள திரு. மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு வாழ்த்துகள்! தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்

ஏற்கனவே தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு ரியோ (பிரேசில்), டோக்கியோ (ஜப்பான்) பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார் என்பதும், தற்போது பாரீஸில் 3-வது முறையாக பதக்கம் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Siva