செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (12:00 IST)

நிதி ஒதுக்கீடு அல்ல, நிதி முதலீடு.. முதலமைச்சர் முக ஸ்டாலின் பெருமிதம்..!

mk stalin
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி உணவு மாணவர்களுக்கு அளிக்கும் திட்டம் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல் தமிழகம் முழுவதில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 
 
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்குவளையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில் மற்ற பகுதிகளில் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தொடங்கி வைத்தனர். 
 
இந்த நிலையில் இந்த திட்டம் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறிய போது நம் எதிர்கால நம்பிக்கைகளாக உள்ள பள்ளி குழந்தைகளுக்கான திட்டத்தின் தொகையை நிதி ஒதுக்கீடு என சொல்வதை விட நிதி முதலீடு என்றே சொல்ல விரும்புகிறேன். 
 
மாணவர்கள் பசியின்றி  பள்ளிக்கு வரவேண்டும், ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும், ரத்தசோகை என்ற குறைபாட்டை நீக்க வேண்டும், மாணவர்களின் வருகை பதிவை அதிகரிக்க வேண்டும், வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணி துணையை குறைக்க வேண்டும், இவைதான் காலை உணவு திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று தெரிவித்தார்.
 
Edited by Mahendran