ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 7 பிப்ரவரி 2024 (08:33 IST)

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்.. பெருமளவு முதலீடு குவிந்துள்ளதாக பேட்டி..

cm stalin
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்பெயின் நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க சென்ற நிலையில் அவர் இன்று சென்னை திரும்பியுள்ளார். இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது பெருமளவு தமிழ்நாட்டிற்கு முதலீடு குவிந்துள்ளதாகவும் ரூ.3440 கோடிக்கு முதலீடுகள் ஸ்பெயின் நாட்டிலிருந்து ஈர்க்கப்பட்டு உள்ளதாகவும் பேட்டி அளித்தார்
 
நியூயார்க் டைம்ஸ் நாளேடு தமிழ்நாடு உற்பத்தி துறையில் முன்னணியில் இருப்பதாக வெளியான செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள் என்றும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வந்துள்ளன என்றும் தெரிவித்தார். 
 
இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் தொழில் துறையில் முன்னேறி வருகிறது என்றும் இனி நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு எனது வெளிநாட்டு பயணம் இருக்கும் என்றும் தெரிவித்தார். 
 
ஹபக் லாய்டு என்ற நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.2500 கோடி முதலீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் தெரிவித்த அவர் இன்னும் பல நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பேன் என்றும் கூறியுள்ளார்.
 
Edited by Siva