முதல்வரின் புதுக்கோட்டை பயணம் திடீர் ரத்து.. என்ன காரணம்?
உலக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று அமைச்சர் ரகுபதியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்க புதுக்கோட்டை செல்ல இருந்த நிலையில் அந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் இன்று சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி இல்லத்தில் நடைபெறும் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை விமானம் மூலம் திருச்சி செல்ல இருந்ததாகவும், அங்கிருந்து அவர் காரில் புதுக்கோட்டைக்கு சென்று, ரகுபதி இல்ல திருமண விழாவில் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டது.
அமைச்சர் ரகுபதியில் திருமண விழாவை முடித்துவிட்டு இன்று இரவு திருச்சி வந்து மீண்டும் சென்னை திரும்ப திட்டமிட்டிருததாக கூறப்பட்டது. ஆனால் திடீரென தமிழக முதல்வர் ஸ்டாலினின் புதுக்கோட்டை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே அவர் அமைச்சர் ரகுபதி இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என தெரிகிறது.
தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியின் பேரன் டாக்டர் எஸ்.நாச்சியப்பன் ரகுபதி மற்றும் டாக்டர் பி.அழகம்மை திருமணத்தில் முதல்வர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை,
Edited by Siva