திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 26 அக்டோபர் 2022 (13:10 IST)

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்: முதல்வர் தலைமையில் அவசர ஆலோசனை!

cm stalin
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்: முதல்வர் தலைமையில் அவசர ஆலோசனை!
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடந்ததால் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டது என்பதும் இதனை அடுத்து இதுகுறித்து 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே.
 
இந்த சம்பவம் குறித்து பாஜக மற்றும் அதிமுக கடும் விமர்சனம் செய்து வரும் நிலையில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து இந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் இருப்பது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
 
இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
 
Edited by Siva