செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (19:03 IST)

வணக்கம் சொன்னால் ஏமாந்துவிடுவார்களா தமிழர்கள்? முக ஸ்டாலின் ஆவேசம்

வணக்கம் என்று சொன்னால் தமிழர்கள் ஏமாந்து விடுவார்கள் என்றும் தமிழகத்துக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி தொகை மற்றும் வெள்ள நிவாரண நிதியை இன்னும் வழங்கவில்லை என்றும் தமிழகத்திற்கு உள்ள ஒரே மாநிலங்களுக்கு உள்ள ஒரே வருவாயான பத்திரப்பதிவு வருவாயையும் ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு என்ற கொள்கை மூலம் பிடுங்க நினைக்கிறார்கள் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆவேசமாக பேசியுள்ளார்
 
இன்று கன்னியாகுமரி மாவட்ட வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்த முதல்வர் முக ஸ்டாலின் வெள்ள நிவாரண பாதிப்பிற்கான நிதி வேண்டி கடிதம் எழுதி இருந்தேன். அந்த நிதி இன்னும் வரவில்லை என்றும் எப்போது வரும் என்று தெரியவில்லை என்றும் கூறினார் 
 
தமிழ்நாட்டு திட்டங்களுக்கான நிதி எங்கே என்றும் இதற்கெல்லாம் உங்களிடமிருந்து பதில் வராது, ஆனால் வணக்கம் என்று மட்டும் சொல்லி தமிழகத்தை ஏமாற்றி விடலாம் என்று மட்டும் நினைப்பார்கள் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்