முன்கூட்டியே பள்ளிகளுக்கு கோடை விடுமுறையா? முதல்வர் இன்று ஆலோசனை!
முன்கூட்டியே பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிப்பது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
கோடை வெயில் தற்போது கடுமையாக கொளுத்தி வரும் நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு பெரும் அவதியுற்று வருகின்றனர்
ஏற்கனவே ஹரியானா ஒரிசா ஆகிய மாநிலங்களில் காலையில் மட்டுமே பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் தமிழகத்தில் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு மட்டும் முன்கூட்டியே கோடை விடுமுறை விடுவது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்ய உள்ளார்
ஆலோசனைக்கு பின்னர் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது