விஜயின் அரசியல் எண்ட்ரீ - எடப்பாடியாரின் அதிரடி பதில்
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலில் நிற்கலாம் என்றும் அரசியல் பேசலாம் என்றும் விஜயின் அரசியல் பேச்சு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 2ஆம் தேதி சர்க்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், இந்த படத்தில் நான் முதல்வராக நடிக்கவில்லை, ஒருவேளை நான் முதல்வரானால் நடிக்க மாட்டேன். ஊழலை ஒழிக்க முயற்சி செய்வேன் என தன் அரசியல் வருகைக்கு அடிபோட்டார். இவரது கருத்திற்கு அரசியல் தரப்பிலிருந்து பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், விஜயின் அரசியல் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் இது ஜனநாயக நாடு, யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம், அரசியலிலும் நிற்கலாம். முதலில் அவர் கட்சியை தொடங்கட்டும் பிறகு பேசலாம் என கூறினார்.