திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 மார்ச் 2022 (11:02 IST)

உங்க வீட்டுக்கு வந்தா சோறு போடுவீங்களா? – குறவர் சமூக மக்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ஆவடி குறவர் சமூக மக்களிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பேசினார்.

கடந்த மே மாதம் தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டறிந்து வருகிறார். இந்நிலையில் இன்று ஆவடி குறவன் சமூக மக்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பேசினார்.

அப்போது அவர்களது குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டவர், விரைவில் அந்த பகுதிக்கு வருவதாகவும் உறுதி அளித்துள்ளார். அப்பகுதி குழந்தைகளிடம் பேசிய முதல்வர் ”நான் உங்கள் வீட்டுக்கு வந்தால் சோறு போடுவீர்களா?” என கேட்க, குழந்தைகள் “கறிசோறே போடுவோம்” என கூறியுள்ளனர்.