செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 16 நவம்பர் 2022 (15:10 IST)

காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல்...சத்யமூர்த்தி பவனில் பரபரப்பு

சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையலகத்தில் இன்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.

சென்னையிலுள்ள காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனின்  நேற்றிரவு , நெல்லை கிழக்கு மாவட்டம் தலைவர் ஜெயக்குமார் ஆதர்வாளர் இருவரை பதவியில் இருந்து நீக்க வேண்டுமென ரூபி மனோகரன் தலைமையில் சிலர்  கூடியிருந்தனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

அங்கு வந்த காங்கிரஸ்தலைவர் கேஎஸ் அழகிரி, இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறினார். அதேபோல், ரூபி மனோகரிடம் பேசியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் இருவருக்கும் இடையே உடன்பாடு இல்லாததால் ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் கேஎஸ் அழகிரியின் காரை மறித்தனர். அப்போது, காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில் நடந்த ஒரு சம்பவத்தையொட்டி எம்.எல்.ஏ ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட தலைவர்கள் சிலர் பொறுப்பாளர் தினேஸ் குண்டுராவிடம் தீர்மானம் அளித்தனர்.

இதுகுறித்து, காங்கிரஸ் தலைமைக்கும் ராகுலுக்கும் தகவல் அனுப்பியுள்ளதால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே பல பிரிவுகளாக உள்ள காங்கிரஸ் கட்சிக்கு இந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Edited by Sinoj