வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 11 அக்டோபர் 2018 (22:39 IST)

திரைத்துறையை அடுத்து மருத்துவ துறையிலும் பாலியல் கொடுமை: இறங்கி அடிக்கும் சின்மயி

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்ததாக அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் 'மீ டூ' ஹேஷ்டேக்கில் சின்மயி களமிறங்கியதும் பல இடங்களில் பாலியல் தொல்லை இருந்துள்ளது என்பதும் பலர் அதை வெளியே சொல்லாமல் இருந்துள்ளனர் என்பதும் தெரிய வருகிறது.

இந்த நிலையில் திரைத்துறை மட்டுமின்றி மருத்துவ துறையிலும் இதுபோன்ற பாலியல் கொடுமை நடந்துள்ளது தற்போது சின்மயி மூலம் வெளிவந்துள்ளது. சென்னையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்றில் தனக்கு மயக்க மருந்து கொடுத்து முட்டு வலி அறுவை சிகிச்சை நடந்ததாகவும் அறுவை சிகிச்சைக்கு பின்னர் தன்னுடைய மார்பகத்தை உதவி டாக்டர்களும் வார்டு பாய்ஸ்களும் தடவி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகவும் தான் அரை மயக்கத்தில் இருந்ததால் தன்னால் எதுவும் செய்ய முடியாத நிலை இருந்ததாகவும் ஒரு பெண் குறிப்பிட்டு அதனை சின்மயிக்கு அனுப்பியுள்ளார். சின்மயி இந்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் சென்னையில் உள்ள ஒருசில குறிப்பிட்ட மருத்துவமனைகளின் பெயர்களை குறிப்பிட்டு அங்கும் இதுபோன்ற பாலியல் கொடுமைகள் நடப்பதாக அவர் பதிவு செய்துள்ளார். கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல் இன்னும் எந்தெந்த துறையில் என்னென்ன நடந்தது என்ற விபரங்கள் வெளிவர போகின்றதோ தெரியவில்லை