ஊரடங்கு கடுமையாக்குவது குறித்து ஆலோசனைக்கு பிறகு அறிவிப்பு! – அமைச்சர் தகவல்!
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு கடுமையாக்கப்படுமா என்பது குறித்து இன்று முதல்வர் அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதலாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளன. தற்போது ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகளும், இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு ஊரடங்கை கடுமையாக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதுகுறித்து விளக்கமளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊரடங்கை கடுமையாக்குவதாக வெளியான செய்தி போலியானது என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு ஊரடங்கு கடுமையாக்கப்படுமா என்பது குறித்து முதல்வர் தெரிவிப்பார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.