செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 17 செப்டம்பர் 2022 (15:15 IST)

155 அடி உயர பெரியார் சிலைக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்!

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் 155 உயரத்தில் தந்தை பெரியாருக்கு பிரமாண்ட சிலை  அமைப்பதற்காகு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

இன்று தந்தை பெரியார் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில், பெரியார் பிறந்த நாள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பிறப்பால் பேதம் கற்பித்து, தீண்டாமை நிலவிய சமூகத்தில், புரட்டுகளுக்குள் புதைந்துகிடந்த அழுக்குகளை அம்பலப்படுத்தி, இந்த மண்ணில் வாழும் பெரும்பான்மையான மக்களும் சுயமரியாதையோடு வாழ்ந்திடும் வரலாற்றைப் படைத்த புரட்சியாளர் தந்தை பெரியார் வழிநடப்போம்! தமிழர் இனமானம் காப்போம்! எனப் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், திருச்சி மாவட்டம்  திண்டிவனம் நெடுஞ்சாலையில், சிறுகனூரில் 27 ஏக்கர் பரப்பரளவில் ரூ.60 கோடி மதிப்பில் பெரியார் உலகம் எனும் ஆய்வு மற்றும் பெரியாரிய பயிலம் அமையவுள்ளது. பெரியாரின் 95 வயதைக் குறிக்கும் வகையில் 60 அடி  உயர பீடத்தில் 95 அடி உயரமுள்ள பிரமாண்ட சிலை நிறுவப்படுகிறது, இதன் மொத்த  உயரம் 155 அடி ஆகும்.

தந்தை பெரியாருக்கு பிரமாண்ட சிலை  அமைப்பதற்காகு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.