திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 3 ஜூலை 2023 (19:45 IST)

#BREAKING முதல்வர் முக.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் இன்று சென்னை கிரீம் சாலையில்  உள்ள அப்போலோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞ்சர் மாளிகையின் 10 வது தளத்தில்,   முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் இன்று காலையில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை சாலைகள் மற்றும் பாலங்கள் தொற பற்றிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில்  அமைச்சர்கள் கே.என்.  நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் தங்கம் தென்னரசு,  ஐ. பெரிசாமி  5  அமைச்சர்கள் பங்கேற்றனர். இவர்களுடன் தமிழகத்தில் புதிய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்ட துறை செயலாகர்களுடன் பங்கேற்றனர்.

இந்த நிலையில்,  தமிழ்நாடு  முதல்வர் முக. ஸ்டாலின் தற்போது சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் திடீரென்று அனுமதிக்கப் பட்டுள்ளார். மேலும், அவருக்கு வழக்கமான மேற்கொள்ளப்படும்  மருத்துவ பரிசோதனைகளுக்காக  அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதா தகவல் வெளியாகிறது.

இதுகுறித்த அறிவிப்பை அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.