ஆகஸ்ட் 9ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: ஓடிடியில் நேரடி ஒளிபரப்பா?
கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆகஸ்ட் 10ஆம் தேதி முடிவடைய உள்ளது. இந்த நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி பிரமாண்டமாக நிறைவு விழாவை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
நிறைவு விழாவை பிரமாண்டமாக நடத்த உள்ளதை அடுத்து இந்த விழாவை நேரடியாக ஒரு முன்னணி ஓடிடி நிறுவனத்தில் ஒளிபரப்ப பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது
இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி உள்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்ட நிலையில் நிறைவு விழாவில் யார் யார் கலந்து கொள்வார்கள் என்பது குறித்த தகவல்களும் இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.