திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 22 ஏப்ரல் 2020 (18:02 IST)

ஊரடங்கில் தனியாக சிக்கிய இளைஞர்! முன்பகைக் காரணமாக நடந்த கொலை!

சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்ப்ட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை கட்டடத் தொழிலாளி. இவரின் இளைய மகன், பாலாஜி பெயின்டிங் வேலை செய்துவந்துள்ளார். இவர் தனது வீட்டுக்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது.

அவர்களின் தாக்குதலால் நிலைகுலைந்த பாலாஜி தப்பி ஓட முயற்சி செய்தார். ஆனாலும் அந்தக் கும்பல், துரத்திச் சென்று அவரை சரமாரியாக தாக்கியது. இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் செல்ல சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி பிணக்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். போலிஸாரின் முதல் கட்ட விசாரணையில் இது முன் விரோதம் காரணமாக நடந்த கொலை என்பது கண்டறியப்பட்டுள்ளது.