1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 15 ஜனவரி 2023 (15:33 IST)

ஜனவரி16ஆம் தேதி புறநகர் ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Chennai Train
ஜனவரி 16ஆம் தேதி சென்னையில் புறநகர் ரயில்கள் இயக்கத்தின் அட்டவணை மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
 ஜனவரி 16ஆம் தேதி திங்கட்கிழமை அன்று திருவள்ளூர் தினம் அரசு விடுமுறை தினம் என்பது தெரிந்ததை. இதனை முன்னிட்டு அன்றைய தினம் சென்னை புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னை - கடற்கரை - செங்கல்பட்டு, சென்ட்ரல் - அரக்கோணம், சென்ட்ரல் - சூளூர்பேட்டை ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதால் இந்த அட்டவணையின் படி ரயில் பயணிகள் தங்களது பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva