1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 17 ஜூலை 2024 (08:11 IST)

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் சென்னை காவல் ஆய்வாளர் கைது.. மோசடிக்கு உடந்தையா?

vijayabaskar
100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவருக்கு உடந்தையாக இருந்ததாக சென்னை காவல் ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நில மோசடி வழக்கில் சிக்கிய முன்னாள் அதிமுக அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில் அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை அடுத்து நேற்று அவர் கேரளாவில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை செய்து சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி எம்.ஆர்.விஜயபாஸ்கர்  தொடர்புடைய நில மோசடி வழக்கில் சென்னை வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நில மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படுவதை அடுத்து வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் என்பவரை சிபிசிஐடி போலீஸ் சார் கைது செய்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva