திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 20 அக்டோபர் 2021 (11:16 IST)

500 ரூவா குடுத்தா அரைமணி நேரத்தில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்! – சென்னையில் மோசடி ஆசாமி கைது!

சென்னையில் கொரோனா நெகட்டிவ் போலி சான்றிதழ் தயாரித்த ஆசாமியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பை குறைக்க தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து வெளிநாடுகள் செல்ல மற்றும் பல பணிகளுக்கு கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்தியிருக்க வேண்டியது அவசியம் என கூறப்பட்டுள்ளது. இரண்டு டோஸ் செலுத்திய சான்றிதழ் அல்லது கொரோனா சோதனை செய்து நெகட்டிவ் என பெற்ற சான்றிதழ் ஆகியவை தற்போதைய தேவையாக இருந்து வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் மண்ணடியில் உள்ள ஆன்லைன் சேவை மையத்தில் போலி கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தயாரிப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து அங்கு ஆய்வு செய்ததில் இர்பான் கான் என்பவர் ரூ.500 கொடுத்தால் அரை மணி நேரத்தில் கொரோனா போலி நெகட்டிவ் சான்றிதழை தயாரித்து வழங்கி வந்தது தெரியவந்துள்ளது. அந்த மோசடி பேர்வழியை போலீஸார் கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.