ஆலந்தூர்- பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
ஆலந்தூர்- பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதற்கு பொது மக்களிடம் வரவேற்பு பெருகியது.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறுகயைில், மெட்ரோ ரயில் விதிகளுக்கு உட்பட்டு சென்னை, ஆலந்தூர் - பரங்கிமலை இடையே இன்று மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. வரும் நாட்களில் மேலும் சில சோதனை ஓட்டங்கள் நடைபெறும் என்றார்.
இந்தப் பாதையில், மெட்ரோ ரயில் பயணிகள் சேவை தொடங்க மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையரிடம் அனுமதி பெற வேண்டும். இந்தப் பாதையில் அடுத்தாண்டு முதல் மெட்ரோ ரயில் பயணிகள் சேவை தொடங்கும் என கூறப்படுகிறது.