திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 19 நவம்பர் 2020 (20:02 IST)

சென்னை மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு சிறப்புப் பெட்டிகள் …

தமிழகத்தில் தலைநகரான சென்னையில் மட்டும்தான் மெட்ரோ ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்  வரும்  23 ஆம் தேதி முதல் மெட்ரோ ரயிலில் செல்லும் பெண்களின் பாதுகாப்பான பயணத்திற்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முதல் வகுப்பு பெட்டிகள் அனைத்திலும் பெண்கள் மட்டுமே பயணிக்கும் வகையில் சிறப்புப் பெட்டிகாக மாற்றப்படுகின்றன.

இந்தச் சிறப்புப் பெட்டியில் பெண்கள் சாதாரணக் கட்டணத்திலேயே பயணிக்கலாம் என சென்னை மெட்ரோல் நிர்வாகம்  தெரிவித்துள்ளது.

இதனால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.