1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 28 ஏப்ரல் 2021 (14:07 IST)

தமிழகத்தில் 5 நாட்கள் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தற்போது கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பொதுமக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது 
 
தமிழக கடலோரப் பகுதியை ஒட்டிய வங்ககடலில் வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளது என்றும் கர்நாடகம் முதல் கேரளம் வரை வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் உள் மாவட்டங்களிலும் 5நாட்கள் மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவித்துள்ளது
 
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பநிலை இருக்கும் என்றும் குறிப்பாக அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்றும் கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது