வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 11 ஏப்ரல் 2018 (19:03 IST)

போராட்டம் எதிரொலி: சென்னை ஐபிஎல் போட்டிகள் மாற்றம்

நேற்று சென்னையில் ஐபிஎல் போட்டி நடப்பதற்க்கு ஒருசில மணி நேரத்திற்கு முன்னர் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் சென்னையே சில மணி நேரங்கள் பதட்டத்தில் இருந்தது. இருப்பினும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போட்டி அசம்பாவித சம்பவங்கள் இல்லாமல் நடத்தப்பட்டது.
 
இந்த நிலையில் சென்னையில் அடுத்த போட்டி வரும் 20ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த போட்டிக்கு நாளை டிக்கெட்டுக்கள் விற்பனையாகும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் நாளை திட்டமிட்டபடி டிக்கெட்டுக்கள் விற்பனை செய்ய வாய்ப்பில்லை என்றே தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
நேற்றைய போட்டியின்போது ஏற்பட்ட பிரச்சனைகள், வீரர்கள் பாதுகாப்பு, வருமானம் குறைவு ஆகிய அம்சங்ககளை கணக்கில் கொண்டு இனிவரும் போட்டிகள் சென்னையில் நடத்தப்படாது என்று ஐபிஎல் போட்டி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சென்னைக்கு பதிலாக வேறு இடங்களை தேர்வு செய்தவுடன் ஐபிஎல் நிர்வாகம் இந்த அறிவிப்பினை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என தெரிகிறது.