1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2023 (17:58 IST)

சென்னை ஐஐடி மாணவர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்! என்ன காரணம்?

Chennai IIT
சென்னை ஐஐடி மாணவர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கடந்த சில நாட்களாக சென்னை ஐஐடி மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் இரண்டு மாதங்களில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில் சென்னை ஐஐடியில் தொடர்ந்து வரும் தற்கொலை சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாணவர்கள் தற்கொலை குறிப்பு சரியான விசாரணை மேற்கொள்ளாத ஐஐடி நிர்வாகத்தை கண்டித்தும் மாணவர்கள் திடீரென நேற்று முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் நடத்திய நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் மாணவர்கள் தற்கொலை குறித்து விசாரணை கமிட்டியில் மாணவப் பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran