டிசம்பர் 31 மாலை முதல் மதுபானம் விற்க தடை! – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட அனுமதிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. பல மாநிலங்களில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் கொண்டாட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் புத்தாண்டை கட்டுப்பாட்டுகளுடன் கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிமன்றம் இன்று விசாரித்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளோடே புத்தாண்டு கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு விளக்கம் அளித்துள்ளது.
எத்தனை கட்டுப்பாடுகள் விதித்தாலும் மதுப்பிரியர்கள் அதை பின்பற்றுவதில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் புதுச்சேரியில் மதுபானக்கடைகளை டிசம்பர் 31 மாலை 7 மணி முதல் அடுத்த நாள் புத்தாண்டு வரை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.