செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 17 மே 2022 (10:49 IST)

தீராத வடகலை, தென்கலை பிரச்சினை..! – அறிவுரை வழங்கிய நீதிமன்றம்!

Kanchipuram
காஞ்சி ப்ரம்மோற்சவ விழாவில் வடகலை பிரிவினர் வேதபாராயணம் செய்ய விதித்த தடைக்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும் ப்ரம்மோற்சவ விழா கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. இதனால் இந்த ஆண்டு ப்ரம்மோற்சவத்திற்கு ஏராளமான மக்கள் வருகை தந்துள்ளனர்.

ப்ரம்மோற்சவத்திற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி சித்ரா பௌர்ணமியையொட்டி வரதராஜபெருமாள் பாலாற்று பகுதியில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது வேதப்பாராயணம் மற்றும் பிரபந்தங்கள் பாடுவது தொடர்பாக வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் இடையே மோதல் எழுந்தது.

இந்நிலையில் ப்ரம்மோற்சவத்தில் வேதப்பாராயணம் செய்ய வடகலை பிரிவினருக்கு இந்துசமய அறநிலையத்துறை அனுமதி மறுத்துள்ளது. இதை எதிர்த்து வடகலை பிரிவினர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் “வடகலை, தென்கலை பிரச்சினையை ஒழுங்குப்படுத்த தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளது” என்று தெரிவித்துள்ளது.