வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 11 பிப்ரவரி 2019 (20:01 IST)

திரையரங்களுக்கு உணவு எடுத்து செல்லலாமா? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் உணவு மற்றும் குடிநீர் கொண்டு செல்ல அனுமதி இல்லாத நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் வெளி உணவுகளைத் திரையரங்குகளுக்கு எடுத்துச்செல்ல மகாராஷ்டிராவில், மாநில அரசு அனுமதியளித்துள்ளது.
 
இதனையடுத்து தமிழகத்தில் உள்ள திரையரங்குகளிலும் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை அனுமதிக்க உத்தரவிடுமாறு சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
 
இந்த வழக்கு கடந்த சில நாட்களாக நடைபெற்ற நிலையில் திரையரங்களுக்கு உணவு மற்றும் குடிநீரை வெளியில் இருந்து எடுத்து செல்ல அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 
 
முன்னதாக கடந்த மாதம் பேட்டியளித்த தமிழக அமைச்சர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, 'வெளியிலிருந்து கொண்டு செல்லும் உணவு பொருட்களை தடை செய்யக்கூடாது என்று ஏற்கனவே திரையரங்கு உரிமையாளர்கள் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.