செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 31 ஆகஸ்ட் 2022 (10:29 IST)

ஒரே இடத்தில் 20 ஆயிரம் விநாயகர் சிலைகள்! – சென்னையில் விநாயகர் கண்காட்சி!

இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

இன்று இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாடெங்கும் பல பொது இடங்கள், கோவில்கள், தெருக்களில் பெரிய பெரிய அளவில், வித்தியாச வித்தியாசமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று முதல் சென்னை சிட்லபாக்கம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு கண்காட்சி நடைபெறுகிறது. சின்ன சைஸ் முதல் பெரிய சைஸ் வரை பல விதமாக கெட்டப்பில் விநாயகர் சிலைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் விநாயகர், பைக்கில் செல்லும் விநாயகர் என விதவிதமான விநாயகர் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சி இன்று தொடங்கி 12 நாட்கள் நடைபெறும் நிலையில் பலவிதமான விநாயகர் சிலைகளை காண மக்கள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர்.