திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 5 செப்டம்பர் 2020 (18:29 IST)

சென்னையில் புறநகர் ரயில் சேவை இயங்கும் தேதியை அறிவித்த தெற்கு ரயில்வே

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.
 
மேலும் வரும் 7ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பேருந்து போக்குவரத்து மற்றும் சிறப்பு ரயில்களும் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு டிக்கெட்டுகளை ஆரம்பமாகி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அடுத்த அதிரடியாக வரும் 7ம் தேதி முதல் சென்னையில் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சென்னையில் மின்சார ரயில்கள் நாளை மறுநாள் முதல் இயங்கும் என்று அறிவிக்கப்படுள்ள இந்த அறிவிப்பு புறநகர் ரயில் பயணிகளுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது