புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 அக்டோபர் 2020 (17:30 IST)

ஆரம்பிக்கும் தீபாவளி பர்சேஸ்; கூடுதல் பேருந்துகளை இயக்க அறிவிப்பு!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில் மக்கள் பொருட்கள் வாங்க அதிகளவில் போக்குவரத்து செய்வதால் பேருந்துகளை அதிகரிப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மக்கள் பொருட்கள் வாங்க வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிப்பது அதிகரித்துள்ளது. முக்கியமாக வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகரிப்பதால் பேருந்துகள் போதாமை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் தீபாவளி வரை வார இறுதி நாட்களையும் சேர்த்து 7 நாட்களுக்கு சென்னையின் முக்கியமான 25 வழித்தடங்களிலும் 50 பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவெடுத்துள்ளது. அதன்படி அக்டோபர் 25,26,27 மற்றும் 31 தேதிகளிலும், நவம்பர் 1, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளும் இந்த சிறப்பு பேருந்துகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.